அசாமில் பரபரப்பு - இளைஞர் காங்கிரஸ் பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.! - Seithipunal
Seithipunal


அசாம் : காங்கிரஸ் பெண் நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்க உத்தரவு.!

அசாம் மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவரான அங்கிதா தத்தா, இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவரான பி.வி.சீனிவாஸ் என்பவருக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து, இதனை பொதுவெளியிலும் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் பதிவிட்ட அந்த நபர் ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் அந்த பதிவில் இணைத்துள்ளார். இந்த பதிவை அசாம் பாஜக முதலமைச்சரான ஹிமந்த பிஸ்வா சர்மா, வரவேற்று பதிவிட்டிருந்தார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது உட்கட்சி விவகாரம் என்றாலும், பாலினபாகுபாடு தொடர்பான புகார்களில் கட்சி நடவடிக்கை எடுக்காமல் போனால், அசாம் காவல்துறை விசாரணை செய்ய நேரிடும்" என்றுத் தெரிவித்துள்ளார்.

அங்கிதா தத்தாவின் இந்த பதிவு தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைமை அவரிடம் நேற்று விளக்கம் கேட்டது. இருப்பினும், அவர் தொடர்ந்து "அசாம் பாஜக முதலமைச்சரிடம் திரைமறைவில் அரசியல் தொடர்புகளை வளர்த்து வருவதாகவும், சகாயம் பெற்று வருவதாகவும்’ அங்கிதாவுக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வந்தன.

இதையடுத்து, இன்று கட்சியின் பொதுச்செயலர் தாரிக் அன்வர் பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், "கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அங்கிதா தத்தாவை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam youth congrass leader angkita dutta dismiss in party


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->