2023-24 நிதியாண்டில் பாஜகவிற்கு கிடைத்த ரூ.2,244 கோடி நன்கொடை! திமுக, காங்கிரசிற்கு எவ்வளவு தெரியுமா?! - Seithipunal
Seithipunal


அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும் எனபது விதி. 

அதன்படி, தேர்தல் ஆணைய இணையதளத்தில் 2023-24 நிதியாண்டுக்கான நன்கொடை விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

* அதிகபட்சமாக பாஜக ரூ.2,244 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 

இந்த நன்கொடை தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை ரூ.723.6 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது.

* இரண்டாவது இடத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ரூ.580 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

* மூன்றாவது இடத்தில் காங்கிரஸுக்கு வெறும் ரூ.288.9 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில், 50 சதவீதம் (ரூ.156.4 கோடி) புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை வழங்கியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.79.9 கோடி நன்கொடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சி (AAP) 11.06 கோடி ரூபாய் 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்), 7.64 கோடி ரூபாய்
திமுக 81 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian political partys Donation report 2023 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->