13க்கு 10 - அசத்தல் வெற்றியை பதிவு செய்த இண்டி கூட்டணி!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று 13 சட்டப்பேரவைகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று. முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவில், திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று உள்ளார். மேலும் அவர் 67757 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். 

இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளை பெற்றுள்ளார். 

மற்ற 12 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வெற்றி பெற்றுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம், டேஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 
ஹிமாச்சல் பிரதேசம், ஹமிர்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 
ஹிமாச்சல் பிரதேசம், நலகர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 
பீகார் மாநிலம், ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்று உள்ளார். 
மத்திய பிரதேஷ் அமர்வாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தின் இரண்டு தொகுதிகள்:
பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் நான்கு தொகுதிகள்: 
ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா இந்த நான்கு தொகுதிகளிலும் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமாக இந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ், ஆம் ஆத்மீ, திரிணாமுல் என இண்டி கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assembly ByElection Result july 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->