ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்! நாளை வாக்கு எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் கடந்த 7-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் சராசரியாக 62 சதவீத வாக்குகளும், ஒரே கட்டமாக பஞ்சாபில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 71.95 சதவீத வாக்குகளும், கோவாவில் 79.61 சதவீதமும் பதிவாகின.

மணிப்பூரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலிக் சராசரியாக 77.32 சதவீத வாக்குகள் பதிவாகின.

மணிப்பூரில் வன்முறை நடைபெற்ற ஏழு வாக்குச்சாவடிகளுக்கு நேற்று மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகளை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிடவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assembly Election Vote Counting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->