பெரும் பரபரப்பு! உதவி கலெக்டர் தீ வைத்து எரிப்பு! போலீசார் குவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் உதவி கலெக்டர் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமையம் மதனப்பள்ளி உதவி கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று நேற்று  முன்தினம் நள்ளிரவு உதவி கலெக்டர் அலுவலகம் தீப்பிடித்து எறிந்தாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டிக்குள்  கொண்டு வந்தனர். அதற்குள்ளாக அலுவகத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் முக்கிய ஆவணங்கள் போன்ற அனைத்தும் தீயில்  எரிந்து நாசம் ஆனது.

இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியை அடுத்து இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அலுவலகத்தில் இருந்த முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது. 

அலுவலகத்தை சுற்றி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மது, பாட்டில்கள் மற்றும் தீக்குச்சிகள் இருந்த உள்ளது. இதன் மூலம் திட்டமிட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் கேனில் பெட்ரோலை தீ வைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் ஊழியர்களை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 200 ஏக்கர் நிலம் மோசடி நடந்ததாகவும் அதனுடைய முக்கிய ஆவணங்கள் அலுவகத்தில் இருந்ததும் தீயில் எரிந்து நாசம் ஆனது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assistant Collector office set on fire in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->