கர்நாடகாவுக்கே இந்த நிலைமையா? அப்போ தமிழகத்துக்கு.. மக்களே உஷாரா இருங்க.!
ater problam in karnataga
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, குளிர் காலம் என்று அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மாசி மாதம் பிறந்தது முதலாக அதிகாலை பனிப்பொழிவு குறையத் தொடங்கியுள்ளது. இப்போதிலிருந்தே வெயில் வாட்டத் தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் குடிநீர் பிரச்சனையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வகையில், நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த 46 தாலுக்காக்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் 183 தனியார் போர்வெல், 58 டேங்கர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை அடுத்தடுத்த கிராமங்களிலும் தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு சில ஆய்வுகளை செய்தது. அதன் முடிவுகளில் கோடைக் காலத்தில் குடிநீர் பிரச்சினை எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 31 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பது துமகுரு மாவட்டம். அதேசமயம் சித்ரதுர்கா, தாவனகரே, மைசூரு, மாண்டியா, ராய்ச்சூர், பிடார், சிக்கமகளூரு, குடகு ஆகிய மாவட்டங்களில் பெரிதாக பாதிப்பு வராது என்று கூறப்படுகிறது.
English Summary
ater problam in karnataga