நெருங்கும் சட்டமன்ற தேர்தல் - பிரச்சாரத்திற்குச் சென்ற கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.!
attack on kejriwal car in delhi
தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த மூன்று கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.
மும்முனை போட்டி இருந்தாலும் ஆம் ஆத்மி - பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், பிரச்சாரத்திற்குச் சென்ற டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவாலின் கார் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவினர் தாக்க முயற்சித்தாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
English Summary
attack on kejriwal car in delhi