உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி! அயோத்தி சாமியாரின் அறிவிப்பால் சர்ச்சை! - Seithipunal
Seithipunal


தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவருடைய தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தி சாமியார் அறிவித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் அயோதியை சேர்ந்த சாமியார் பரஹாம்ச ஆச்சாரியார் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் தான் ஜல சமாதி அடையப் போவதாக அறிவித்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். ஆனால் அதன் பிறகு அது போன்ற எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்துக்கு எதிராக பேசிய நிலையில் உதயநிதியின் புகைப்படத்தை ஒரு வாளில் குத்தி கையில் பிடித்துக் கொண்டு அந்த புகைப்படத்தை எரித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு ரூபாய் 10 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhi preacher announced 10 crores for Udhayanidhi head


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->