போலி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த பாஜக எம்எல்ஏ., பதவி பறிப்பு, சிறையில் அடைப்பு.! - Seithipunal
Seithipunal


போலி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலோரியில் போலிச்சான்றிதழ் கொடுத்து சேர்ந்த குற்றம் உறுதியானதால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கபு திவாரி, தனது பதவியை இழந்து சிறைக்கு சென்றுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் : அயோத்தியில் உள்ள கோஸ்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர், கபு திவாரி. இவர் கல்லூரி ஒன்றில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கபு திவாரி கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்தது உறுதியானதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தண்டனை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya Gosaiganj bjp mla case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->