பொய் செய்தியை நம்ப வேண்டாம்...தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி அறிவுரை!
Don t believe fake news... TNPSC advises candidates
2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்' எனடி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. மேலும் இதற்கான, பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த ஆண்டு குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத்திட்டங்கள்டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. இதையடுத்து இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., '2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளது.
English Summary
Don t believe fake news... TNPSC advises candidates