அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு!
Ayodhya Ram Temple Kumbabhishekam on jan22 2024
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது கட்டுமான பணியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தரைத்தள கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது முதல் தளத்தின் பணிகள் மும்முரமக நடைபெற்று வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பணியானது சுமார் 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்களாக ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ராமர் கோவிலை சுற்றி சுமார் 70 ஏக்கரில் அனுமன் சிலை, ராமாயண நூலகம், வால்மி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உட்பட ஆறு மண்டபங்கள் அமைய உள்ளது. சுமார் 161 அடி உயரத்தில் ராமர் கோவிலில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பு ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கும்பாபிஷேகத் தேவையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கும்பாபிஷேகம் நடைபெறும் என கட்டுமான குழு தலைவர் ரூபேந்திரா மிஸ்ரா அறிவித்துள்ளார். டிசம்பர் மாதத்திற்கு ராமர் கோவிலின் முதல் தளத்தின் கட்டுமான பணிகள் முடிந்து விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ayodhya Ram Temple Kumbabhishekam on jan22 2024