அயோத்தி ராமர் கோவில் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் பக்தர்களுக்கு திறப்பு.!
Ayodhya Ram temple to open for devotees in January 2024
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமான பணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் கோவிலின் கட்டுமான பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், 2024ஆம் ஆண்டு ஜனவரியில் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியின் முன்னேற்றம் குறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
ஸ்ரீராமர் கோவில் கட்டும் பணி கிட்டத்தட்ட 50% நிறைவடைந்துள்ளது. கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது. கோயிலின் கருவறை கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 30% முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அதுவும் தயாராகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு ஆண்டு முடிவதற்குள், ராமர் கோவிலின் தரை தளம் மற்றும் முதல் தளமும் தயாராகிவிடும். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில், கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டு, பக்தர்களுக்கு கோவில் திறக்கப்படும் என்றும், கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Ayodhya Ram temple to open for devotees in January 2024