பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை! வாழ்நாள் இலவச பஸ்பாஸ் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயணம் அறிவித்துள்ளது தெலுங்கானா போக்குவரத்து கழகம் .

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள கரீம் நகரில் பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் 16ஆம் தேதி குமாரி என்ற கர்ப்பிணி பெண்மணி தனது கணவருடன் பத்ராசலம் செல்லும் பேருந்தில் ஏறுவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு பணியில் இருந்த மாநில போக்குவரத்து கழக ஊழியர் உடனடியாக ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்தார். 

இருப்பினும் ஆம்புலன்ஸ் வருவதற்குள் குமாரிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனையடுத்து  அங்கிருந்து போக்குவரத்து கழக பெண் ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் குமாரிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் குமாரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து தாயும் குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் கரீம் நகர் பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு தனது வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய சிறப்பு பாஸ் வழங்கப்படும் என தெலுங்கானா மாநிலம் சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

மேலும் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby born at the bus station Lifetime free bus pass notification


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->