தனது மருமகனை அரசியல் வாரிசாக நியமித்தார் - மாயாவதி! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவரது மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தனது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசியல் வாரிசாக நியமனம் செய்துள்ளார். 

லக்னௌவில் இன்று பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவரது மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தனது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார். மேலும் அவரை தனது அரசியல் வாரிசாகவும் அறிவித்துள்ளார். 

கடந்த மே மாதம் நடந்த கட்சி கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, அவர் கட்சியின் பிண்ணனி மற்றும் அக்கட்சி டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளுடன் இணைந்திருப்பது குறித்தும் பேசினார்.

அப்போது, அவர் மருமகன் ஆகாஷ் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசியல் வாரிசு பொறுப்பில் இருந்து வந்த நிலையில், அவர் மீதான பாலியல் வழக்கு மற்றும் தேர்தல் கூட்டங்களில் தவறாக உரையாற்றியதால் மாயாவதி அவரை கட்சி பதவியிலிருந்து நீக்கினார்.

இந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசியல் வாரிசு பதவியில் தொடர்வதாக இன்று, நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் மாயாவதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bahujan samaj party mayawati Political successor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->