திடீரென பேருந்தில் பற்றிய தீ.. உறக்கத்திலேயே கருகி மரணித்த கண்டக்டர்.!
Bangalore bus conductor died In fired bus
பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த போது உள்ளே உறங்கிக் கொண்டிருந்த கண்டக்டர் தீப்பற்றி மரணித்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பகுதியில் லிங்க தீரணஹல்லி பஸ் ஸ்டாண்டில் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இரவு நேரத்தில், அந்த பேருந்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் உறங்கியுள்ளனர்.
அப்போது பேருந்தில் அதிகப்படியாக கொசு கடித்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி அருகில் இருந்த ஒரு ஓய்வு அறைக்கு சென்று உறங்க ஆரம்பித்துள்ளார். ஆனால் நடத்துனர் முத்தையா அந்த பேருந்திலேயே தூங்கி இருக்கிறார்.நின்று கொண்டிருந்த அந்தப் பேருந்து திடீரென தீப்பிடிக்க ஆரம்பித்த நிலையில், உள்ளே உறங்கிய கண்டக்டர் முத்தையா அந்த தீயில் மாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து 80 சதவீத காயங்களுடன் இருந்த முத்தையாவை பிணமாக மீட்டெடுத்தனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேருந்தில் எப்படி தீ பிடித்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Bangalore bus conductor died In fired bus