50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கியுள்ள பெங்களூரை சேர்ந்தவர்; வியப்பில் நாய் பிரியர்கள்..!
Bangalore man buys dog for Rs 50 crores
ரூ.50 கோடி கொடுத்து உலகின் மிகவும் விலை உயர்ந்த நாயை பெங்களூருவை சேர்ந்த சதீஷ் என்பவர் வாங்கியுள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நாய்க்கு அவர் 'கடபாம்ப் ஒகாமி' (Cadabomb Okami) என பெயர் சூட்டியுள்ளார்.
நாய்களை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்து வரும் இவர், 'இந்தியன் டாக் பிரீடர்ஸ் அசோசியேசன்' என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, தற்போது நாய்களை இனப்பெருக்கம் செய்வதை நிறுத்தி விட்டு, நாய் கண்காட்சிகளை நடத்தி கணிசமான தொகையை சம்பாதித்து வருகிறார்.

50 கோடி க்கு வாங்கியா ஓநாய் போல தோற்றமளிக்கும் இந்த அரிய வகை நாய், குளிர் பிரதேசமான ரஷ்யா, ஜார்ஜியா நாடுகளை தாயகமாக கொண்டது. அடர்ந்த முடி கொண்டது. வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான திறன் கொண்டது.இதனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த நாய் வகை பிரபலமானது.
நாய் ஆர்வலர் சதீஷ், ஏற்கனவே 150க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான நாய்களை வளர்த்து வருகிறார். இந்த ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியது குறித்து அவர் கூறியதாவது:

''நான் நாய்களை விரும்புகிறேன், தனித்துவமான நாய்களை வைத்திருக்கவும், அவற்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தவும் விரும்புகிறேன். ஏனென்றால் இந்த நாய்க்குட்டியை வாங்க ரூ.50 கோடி செலவிட்டேன். ஒகாமியைத் தவிர, பெங்களூருவில் ஏழு ஏக்கர் பண்ணையில் 150-க்கும் மேற்பட்ட நாய் இனங்களை வளர்த்து வருகிறேன்.
இந்த நாய் அரிதானவை என்பதால் நான் அவற்றை வாங்குவதற்காக அதிக பணம் செலவிட்டேன். எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது. இதனால் நாய்களை வாங்குகிறேன். '' என்று கூறியுள்ளார்.
English Summary
Bangalore man buys dog for Rs 50 crores