விவசாயிக்கு கடன் கொடுக்க லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர்.! 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.!
Bank manager who took bribe to give loan to farmer sentenced to 2 years in jail
கர்நாடக மாநிலத்தில் விவசாயிக்கு கடன் கொடுக்க லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரவி. இவர் விவசாயத்திற்காக வங்கி ஒன்றில் ரூ.1 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த வங்கியில் மேலாளராக இருந்த ஸ்ரீதர் என்பவர், ரவியிடம் கடன் வழங்குவதற்கு ரூபாய் 7000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ரவி லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் ரவியிடம் இருந்து 7000 லஞ்சம் பெற்றபோது வங்கி மேலாளரை கையும் களவுமாக லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஸ்ரீதர் வங்கி மேலாளர் என்பதால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் ரவியிடம் ரூபாய் 7000 ஸ்ரீதர் லஞ்சமாக பெற்றது ஆதாரத்துடன் நிரூபணமாகியது.
இதைத்தொடர்ந்து நீதிபதி வங்கி மேலாளர் ஸ்ரீதருக்கு இரண்டு ஆண்டுகள் சிறதண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Bank manager who took bribe to give loan to farmer sentenced to 2 years in jail