பொது மக்களின் கவனத்திற்கு.. ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை..!!
Banks have 12 days holiday in June month
நாளை ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் நாடு முழுவதும் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி ஜுன் மாதத்தில் 12 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி ஞாயிறு, ஜூன் 10ம் தேதி 2வது சனிக்கிழமை, ஜூன் 11ம் தேதி ஞாயிறு, ஜூன் 15ம் தேதி YMA நாள்/ராஜா சங்கராந்தி - மிசோரம் மற்றும் ஒடிசா
ஜூன் 18ம் தேதி ஞாயிறு, ஜூன் 20ம் தேதி காங் ரத யாத்திரை - ஒடிசா மற்றும் மணிப்பூர், ஜூன் 24ம் தேதி நான்காவது சனிக்கிழமை, ஜூன் 25ம் தேதி ஞாயிறு, ஜூன் 26ம் தேதி கர்ச்சி பூஜை - திரிபுரா, ஜூன் 28 ஈத்-உல்-ஜுஹா மகாராஷ்டிரா, ஜம்மு, கேரளா மற்றும் ஸ்ரீநகர்.
ஜூன் 29ம் தேதி பக்ரி ஈத் - மகாராஷ்டிரா, சிக்கிம், கேரளா மற்றும் ஒடிசா தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் விடுமுறை, ஜூன் 30ம் தேதி ரேம்னா - மிசோரம் மற்றும் ஒடிசா என 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக விடப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையோடு வங்கிகளுக்கு கூடுதலாக 3 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஜுன் 10ம் தேதி 2வது சனிக்கிழமை, ஜுன் 24ம் தேதி 4வது சனிக்கிழமை மற்றும் ஜுன் 28ம் தேதி பக்ரீத் என வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Banks have 12 days holiday in June month