உருவாகியது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு அறிவித்துள்ளது.

வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வாக்கில் ஒடிசா கடற்கரையில், பூரி அருகே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

எண்ணூர், காட்டுப்பள்ளி, சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்ன், தூத்துக்குடி துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தற்போது மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bay of Bengal low pressure point july


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->