அடுத்த அதிரடி! 'பாரத' பிரதமர் நரேந்திர மோடி! எதிர்க்கட்சிகளின் கண்டனத்தை கண்டுகொள்ளாத பாஜக! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலில், இந்திய பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியை வீழ்த்திய ஆகவேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ், திமுக, திரிணமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன.

இந்த கூட்டணிக்கு ஐஎன்டிஐஏ (I.N.D.I.A) என பெயரும் சூட்டப்பட்ட நிலையில், ஆங்கிலேயா்களால் வைக்கப்பட்ட ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக, நம் நாட்டின் தொன்மையான பெயரான ‘பாரதம்’ என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்று, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தின.

இந்த நிலையில், ஜி20 மாநாட்டின் அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவா்’ என்பதற்குப் பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவா்’ என குறிப்பிடத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்க்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தோனேசியா தலைநகா் ஜகாா்தாவில் நடைபெறும் 20-ஆவது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமா் மோடியின் நிகழ்ச்சி நிரலில் 'இந்திய பிரதமர்' என்பதற்கு பதிலாக 'பாரத பிரதமர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்தியா என்ற பெயருக்கு பதில் 'பாரதம்' என்ற பெயரை மத்திய அரசு முன்மொழிய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->