#ByeByeModi: "உண்மையான நிறம் வெளுக்காது".. பாஜகவை கலாய்த்த பாரத் ராஷ்ட்ர சமிதி..!! - Seithipunal
Seithipunal


தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜர்..!!

டெல்லி மதுபான புதிய கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு 8ம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கவிதா பெண் ஒருவரிடம் விசாரணை நடத்துவதாக இருந்தால் வீட்டில் வைத்து விசாரணை நடத்த சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறி எனவே தன்னை தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொண்ட கவிதா மார்ச் 16ம் தேதி நேரில் ஆஜராவதாகத் தெரிவித்திருந்தார். இதை அமலாக்கத்துறை ஏற்க மறுத்ததை அடுத்து இன்று (மார்ச் 11) நேரில் ஆஜராவதாக கவிதா தெரிவித்திருந்தார். இதை அமலாக்கத்துறை ஏற்றுக்கொண்டது. 

இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். டெல்லியில் உள்ள சந்திரசேகர ராவின் இல்லத்திற்கு கவிதா உடன் அவரது சகோதரரும் பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் மூத்த தலைவருமான கே.டி. ராமாராவும் அங்கு வந்துள்ளார். ஏராளமான கட்சித் தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் அமலாக்க துறையை எதிர்க்கட்சிகள் மீது ஏவி பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தை செலுத்தி வருவதை குறிப்பிடும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் அமலாக்கத் துறையின் ரைடு வைத்து அனைவரையும் காவி நிறத்திற்கு மாற்றலாம் ஆனால் கவிதாவை காவி நிறத்த்திற்கு மாற்ற முடியாது என்று பொருள்படும்படி அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் "உண்மையான நிறம் வெலுக்காது" என குறிப்பிட்டுள்ள இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat Rashtra Samithi criticised BJP government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->