"இவர் தான் காரணம்"... போஜ்புரி நடிகை தற்கொலை விவகாரம்... சிக்கிய புதிய ஆதாரம்.!
Bhojpuri actress suicide matter Police intensive investigation with new evidence
பிரபல போஜ்பூரி நடிகையான அகன்ஷா தூபே திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியத. இது தொடர்பாக காவல்துறையினர் அவரது முன்னாள் காதலன் சமர் சிங் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அகன்ஷா டுபே இன்ஸ்டாகிராமில் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி தற்போது மேலும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அவரது தற்கொலையின் போது ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னர் இந்த வீடியோ புதிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் அகன்ஷா துபே தான் மக்களுடன் பேசப்போவது இதுதான் கடைசி என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தனது மரணத்திற்கு முன்னால் காதலன் சமர் சிங் தான் காரணம் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். சமர் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நிலையில் இந்த வீடியோவை முக்கிய ஆதாரமாக வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தும் தடையியல் நிபுணர்கள் உதவியுடன் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சிறையிலிருக்கும் சஞ்சய் மற்றும் சமர்சிங் ஆகியோரிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
English Summary
Bhojpuri actress suicide matter Police intensive investigation with new evidence