எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால்... - நிதிஷ் குமார் இஸ்லாமியர்களுக்கு பகீர் வேண்டுகோள்.!
Bihar cm Nitish Kumar appeal Muslims
பீகார், ஜமுயில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மாநில முதல்வரும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு பேசினர்.
பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் பேசும்போது, மத்திய அரசில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறார்.
இந்த 10 ஆண்டுகளில் அவர் பீகார் மாநிலத்திற்காகவும் நாட்டிற்காகவும் மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார். எங்களுடைய பதவி காலத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தவறுதலாக கூட எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் மீண்டும் அந்த கலவரங்கள் தொடங்கிவிடும் என இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வேண்டுகோள் விடுக்க நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதாவது, ராம் விலாஸ் பஸ்வானின் சிந்தனைகளை முழு அக்கறையுடன் எனது இளைய சகோதரர் முன்னெடுத்துச் செல்வதில் முழுமையான திருப்தி அடைகிறேன்.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் பீகார் வழிகாட்டியது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு 5 - 6 பீகார் தலைமுறையினருக்கு நீதி கிடைக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Bihar cm Nitish Kumar appeal Muslims