நாளை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு... மாநில அரசு அதிரடி உத்தரவு..!!
Bihar govt orders to conduct caste based census from tomorrow
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு எஸ்சி/எஸ்டி பிரிவினரை தவிர மற்ற அனைவரையும் சாதி வாரிய கணக்கெடுப்பில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
மேலும் ஓ.பி.சி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சாதிகள் எவை என்பதை இனம் கண்டு பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிலையில் பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சமூக நீதியை பாஜக சீர்குலைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தை ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது. அதன் அடிப்படையில் நாளை (ஜன.7) முதல் மாநிலம் முழுவதும் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. இந்த பணியானது வரும் மே மாதம் இறுதிக்குள் முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Bihar govt orders to conduct caste based census from tomorrow