சுட்டெரிக்கும் வெப்ப அலை... பீகாரில் 19 பேர் பரிதாப பலி!
Bihar heat wave19 people died
இந்தியாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் செய்த ஆண்டு பதிவாகியுள்ளதால் வெப்ப காற்று வீசுகிறது. பீகார் மாநிலத்தின் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர்.
அவர்களுக்கு முதல் உதவி வழங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இது போன்ற சம்பவம் பல பள்ளிகளிலும் நடைபெற்றது.
இதற்கிடையே வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பிகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல் மந்திரி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பீகாரில் வெப்ப அலை காரணமாக தேர்தல் அலுவலர் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து வெப்ப அலையை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேவை இல்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் பீகார் அரசு வலியுறுத்தியுள்ளது.
English Summary
Bihar heat wave19 people died