இரு இளைஞர்களை சரமாரியாக தாக்கிய நர்சுகள்.! வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


வசதிகள் இல்லாத மருத்துவமனையை புகைப்படம் எடுத்த காரணத்தால் இரண்டு இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அரங்கேறி உள்ளது. 

பிகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ் குமார் இருக்கிறார். இந்த மாநிலம் தான் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக அறியப்படும். இதில், மருத்துவ வசதிகள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. 

இப்படிப்பட்ட நிலையில் பீகார் மாநிலத்தின் சப்ரா பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், அங்கே போதுமான வசதிகள் இல்லாததை கண்ட இளைஞர்கள் இரண்டு பேர் அதை புகைப்படம் எடுத்தனர். 

அவர்கள் புகைப்படம் எடுப்பதை கண்ட செவிலியர்கள் ஓடிவந்து அவர்களை லத்தியை கொண்டு அடித்து தாக்குகின்றனர். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Nurses attack 2 Youngsters 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->