15 நாட்களிலேயே 10 சம்பவங்கள்... பீகார் அரசின் அடுத்த நடவடிக்கை? மக்கள் குற்றசாட்டு.!
Bihar today collapsed Another bridge
பீகார் மாநிலத்தில் இன்று மற்றொரு பாலம் இடிந்து விழுந்ததில் கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் பீகார் சரண் மாவட்டத்தில் மட்டும் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலங்கள் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று சரண் மாவட்டத்தில் இரண்டு சிறிய பாலங்கள் இடிந்தன. கடந்த 16 நாட்களில் பீகாரின் மதுபானி, ஆராரியா சிவான் மற்றும் கிழக்கு சாம்பாரண் கொஞ்சம் மாவட்டங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பாலம் உள்பட 10 பாலங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து இடிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த பீகார் அரசு உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. பராமரிப்பின்மை, தரமற்ற கட்டுமானம் போன்ற காரணங்களால் 10 பாலங்கள் இடிந்து விழுந்ததாக மாநில பொதுப்பணித்துறை மீது பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
English Summary
Bihar today collapsed Another bridge