தமிழகத்தில் பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ போலியானது - டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், தமிழக மக்களால் தாக்கப்படுவது போன்ற இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. 

அதிலும் குறிப்பாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மிக வேகமாக பரவியது. இதை அறிந்த தமிழக காவல்துறை அந்த வீடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- "சமூக வலைதளங்களில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற இரண்டு போலி வீடியோக்கள் பரவி வருகிறது.

அந்த வீடியோக்கள் தவறானது மற்றும் போலியானது. இந்த இரண்டு வீடியோக்களும் ஏற்கனவே நடைபெற்ற இருவேறு சம்பவங்களை ஒன்றாக திரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு வீடியோ திருப்பூர் மாவட்டத்தில் பீகார் தொழிலாளர்கள் இரண்டு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும்.

மற்றொரு வீடியோ கோயம்புத்தூரில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar youths attack vedio fake dgp sylendira babu explanation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->