பாஜக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் - அம்பலப்படுத்தும் ராகுல் காந்தி! சிக்கலில் மோடி அரசு! - Seithipunal
Seithipunal


பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் நடந்துள்ளதாகவும், இதில் அதானி பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பிரதமர் நரேந்திர மோடி தனது அபிமான நண்பரான அதானிக்கு தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்று உள்ளார்.

இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்துள்ளார். இது அதிக மின் கட்டணம் செலுத்தும் மக்களின் பணமாகும். இந்த கொள்ளை பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வெளிப்படையான ஊழலை கண்டும் காணாமல் இருப்பதற்கும், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, ஆகியவை விசாரணை நடத்தாமல் இருப்பதற்கும், எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என பிரதமர் நரேந்திர மோடி பதில் கூறுவாரா?" என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வருகின்ற ஜூன் மாதம் நான்காம் தேதிக்குப் பின்னர், இந்த மிகப்பெரிய ஊழலை புதிதாக பொறுப்பேற்கும் மத்திய அரசு முழுமையாக விசாரணை செய்யும். அப்போது பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இந்த ஒவ்வொரு ரூபாயையும் அந்த புதிய மத்திய அரசு கணக்கெடுக்கும்" என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பதிவு பல்வேறு விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும் பாஜக அரசு மீது தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி கூறியுள்ள இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இது அடுத்து நடக்கவுள்ள ரெண்டு கட்ட வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உடனடியாக ராகுல் காந்தியின் இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பாஜக எதிர்வினை அல்லது  அவரின் குற்றச்சாட்டை ஒன்றும் இல்லாமல் ஆக்கவில்லை என்றால், அடுத்து நடக்க உள்ள இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Adani NarendraModi Coal RahulGandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->