மாணவர்கள் மீது தாக்குதல் - போராட்டத்தில் குதித்த பாஜக - கொல்கத்தாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு, சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 

இதற்கிடையே, அம்மாநிலத்தில் உண்மையான குற்றவாளிகளைக் காக்க திரிணாமுல் அரசு முயல்வதாகவும், இதனால் மம்தா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதிலும் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அம்மாநில அரசு அனுமதி தராததால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து, மாணவர்கள் மீது போலீசார் சரமாரியாகத் தடியடி நடத்தினர். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாஜக, தற்போது நேரடியாக போராட்டத்தில் இறங்கியுள்ளது. 

அதாவது, இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது, மருந்தகங்கள், பால், காய்கறி வண்டிகளை தடுக்க வேண்டாம் என்று பாஜக தலைமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp bandh announce for attack college student issue in kolkatta


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->