மது விற்பனையில் ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட பாஜக அரசு திட்டம்...!!
BJP govt plan to earn Rs45000 crore revenue from liquor sales
மது விற்பனையில் ரூ.45,000 கோடி வருவாய் ஈட்ட உத்திரபிரதேசத்தை ஆளும் பாஜக அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது. இந்தியாவில் மாநில அரசுகளுக்கு மது விற்பனை வருவாய் மிக முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. கோவா, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் சுற்றுலாத்துறையை நம்பி இருப்பதால் அங்கு மது விற்பனை முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது.
அதேபோன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மது விற்பனை முக்கிய நிதி ஆதாரமாக இருந்து வருகிறது. இருப்பினும் பூரண மதுவிலக்கு என்ற தோஷமும் இருந்து வருகிறது.
தமிழக அரசு மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டி வருவதை பாஜக உட்பட பல எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் மது விற்பனையில் வருவாயை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 2023-2024ம் நிதியாண்டில் மது விற்பனையில் ரூ.45,000 கோடி வருவாய் என இலக்கு நிர்ணயத்துள்ளது.
பண்டிகை காலங்களில் மது விற்பனைக்கான நேரத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று உத்திரபிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் பாங்க் பானங்கள் விற்கும் கடைகளுக்கான உரிம கட்டணத்தை 10% உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பிற கட்டணங்களும் உயர்த்தப்படுவதால் ஏப்ரல் மாதம் முதல் மதுபானங்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் வருவாய் ஈட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் கலால் வரி உயர்த்தப்படுவதாக உத்திரபிரதேசத்தை ஆளும் பாஜக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
BJP govt plan to earn Rs45000 crore revenue from liquor sales