"உண்மையை சரிபார்க்க கூட முயற்சிக்கவில்லை" பாஜகவை கடுமையாக விமர்சித்த RSS..!!
bjp has been criticised by rss magazine
தேர்தலுக்கு பின்னர் ஆர்எஸ்எஸ்சின் அதிகார்வபூராவ இதழான "ஆர்கனைசர்" பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் இடம் பெற்ற ஒரு கட்டுரையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை வரிசையாக பட்டியலிட்டடுள்ளது.
பாஜகவினர் அதீத ஆர்வத்துடன் தேர்தலில் போட்டியிட்டதாகவும், இங்கு உள்ள உண்மை நிலையை சரிபார்க்க கூட முயற்சிக்கவில்லை என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அந்த இதழில் இடம்பெற்ற கட்டுரையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள், நரேந்திர மோடியின் ஆளுமையின் கவர்ச்சியில் மூழ்கி, தங்கள் சொந்த உலகத்தில் மூழ்கியிருந்த பாஜகவின் அதீத ஆர்வமுள்ள தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் உண்மைச் சோதனை. சாமானியனின் குரல் அவர்களைச் சென்றடையவில்லை". என்று கூறப்பட்டுள்ளது
அந்த ஆர்கனைசர் இதழில் உள்ள இந்தக் கட்டுரையை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் ரத்தன் ஷர்தா என்பவர் எழுதியுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த தொண்டர்களை புறக்கணித்தது பாஜக அரசு. இந்த மாதிரியான தொண்டர்கள் புகழின் மீதோ அல்லது பதவியின் மீதோ ஆசையில்லாமல் அயராது உழைத்து பலன் தருபவர்கள்.
நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலை பாஜகவின் ஆர்வமுள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த தேர்தலை பற்றி குறைவாக எடை போட்டுள்ளனர். 400 இடங்களை வெல்வோம் என்ற பிரதமர் மோடியின் முழக்கம் அவர்களுக்கு இலக்காகவும் எதிர்க்கட்சிகளுக்கு சவாலாகவும் இருப்பதை பாஜகவினர் உணரவில்லை.
ஒரு தேர்தல்கலில் கடின உழைப்பின் மூலமாகவே இலக்குகளை எட்டப்படுகிறது, சமூக ஊடகங்களில் போஸ்டர்கள் அல்லது செல்ஃபிகள் மூலம் அல்ல என்று ரத்தன் ஷர்தா எழுதினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காதது குறித்து ரத்தன் ஷர்தா பேசுகையில், "ஆர்எஸ்எஸ் தொழிலாளர்கள் பாஜகவின் களப் படை அல்ல. பிஜேபி நாட்டில் மிகப் பெரிய கட்சி, அதற்கு நிறைய தொண்டர்கள் உள்ளனர். தேசிய நலன் சார்ந்த பிரச்சனைகளில் RSS சங்கம் விழிப்புணர்வை பரப்புகிறது. சங்கம் 1973 முதல் 1977 வரை மட்டுமே தீவிர அரசியலில் பங்களித்தது. இந்த முறை எங்கள் தொழிலாளர்கள் தெருக்கள், நகரங்கள் மற்றும் அலுவலக மட்டங்களில் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தச் சொன்னோம்". என்று கூறினார்.
English Summary
bjp has been criticised by rss magazine