இடதுசாரிகள் டிரம்பை கொல்ல முயற்சி! பரபரப்பை கிளப்பிய கங்கனா ரனாவத்! - Seithipunal
Seithipunal


இடதுசாரிகள் டிரம்பை கொல்ல முயற்சி செய்துள்ளனர் என பாஜக எம்.பி யும் நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் முன்னாள் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதனால் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கலந்துகொண்டு டொனால்டு டிரம்ப் பேசிக் கொண்டிருக்கும் போது  மர்ம நபர் ஒருவர் ட்ரம்பை சுட்டார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு பாய்ந்தது. காதிலிருந்து ரத்தம் சிந்தி நிலையில் டொனால்டு டிரம்ப் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இந்த நிலையில் டொனால்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நடிகையும் பாஜாக எம்பியுமான கங்கனா தனது சமூக வலைதளபக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, டொனால்ட் டிரம்ப் தனது பேரணியில் சுடப்பட்டார் அவர் இந்த படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பித்தார்.

கிட்டத்தட்ட 80 வயது ஆகும் அவர் மீது பல தோட்டகள் தொலைத்தாலும் அமெரிக்கா வாழ்க என்று கத்திக்கொண்டே எழுந்து இந்த தேர்தலில் வெற்றி பெறுவார். ஒரு போதும் வலதுசாரிகள் சண்டையை துவங்கமாட்டார்கள். அவர்கள் தான் சண்டையை முடித்து வைப்பார்கள்.

டொனால்ட் டிரம்ப் புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அணியவில்லை என்றால் படுகொலை தாக்குதலில் இருந்து தப்பித்திருக்க மாட்டார். இடதுசாரிகள் டிரம்ப்பை கொல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஒரு போதும் வெறுப்பைபும் வன்முறையும் வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP Kangana Ranaut says the Left has tried to kill Trump


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->