மோடி பதவியேற்பு விழாவின் போது பற்றி எறிந்த பாஜக அலுவலகம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைக்க ஜனாதிபதியிடம் உரிமை கோரப்பட்டது. 

இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிலையில், மோடி 3 வது முறையாக பிரதமராக பதவியேற்ற விழாவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

அந்த வகையில் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூர் பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதில் சில பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பா.ஜ.க. அலுவலகத்தில் தீப்பற்றி எரிந்தது. உடனே பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து அனைவரும் தப்பியோடினர்.

பின்னர் இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் விரைந்து வந்த பா.ஜ.க. அலுவலகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்கிடையே இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp office fire accident in madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->