மக்களுடைய பணம் பாஜக நண்பர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது - மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு.!
bjp party use money from lic and bank mamtha banarjee speach
மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எல்.ஐ.சி. மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை பாஜக தங்களது கட்சிக்காக செயல்படும் நண்பர்களுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:- "நாட்டில் இந்த அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு நீடித்தால் எல்.ஐ.சி. அதிக அளவில் பாதிக்கப்படும், அதுமட்டுமல்லாமல் எல்.ஐ.சி பங்குதாரர்களுக்கு அதிகளவில் பாதிக்கபடுவார்கள்.
நாட்டில், எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்பனை செய்யப்படும் செயலைப் பார்த்தால் மிகுந்த அச்சம் ஏற்படுத்துகிறது. மக்கள் எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள பணம் பாரதிய ஜனதா கட்சிக்கு உதவியாக உள்ள அவர்களுடைய நண்பர்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளில் நீங்கள் உழைத்து பெரும் பாடுபட்டு செலுத்திய பணம் உங்களுக்கு கிடைக்குமா?, கிடைக்காதா? என்பதே உங்களுக்குத் தெரியாது என்று அவர் தெரிவித்தார்.
English Summary
bjp party use money from lic and bank mamtha banarjee speach