காங்கிரஸ் ஆட்சியில் 48,20,69,00,00,000 ரூபாய் ஊழல்! பாஜக வெளியிட்ட "காங்கிரஸ் ஃபைல்" ட்ரைலர்!
BJP releases first episode of Congress Files corruption
காங்கிரஸ் ஆட்சியில் 48,20,69,00,00,000 ரூபாய் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டி, 'காங்கிரஸ் ஃபைல்' என்ற முதல் அத்தியாயத்தை பாஜக வெளியிட்டுள்ளது.
இதில், 2G, நிலக்கரி ஊழல் முறைகேடுகள் குறித்து பாஜக தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கோப்பு"களின் முதல் அத்தியாயம் என்ற தலைப்பில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக எவ்வாறு நடந்தன என்பதைப் பாருங்கள் பதிவிட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த பாஜகவின் அந்த வீடியோவில், காங்கிரஸ் கட்சி தனது 70 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்களிடமிருந்து 48,20,69,00,00,00,000 ரூபாய் கொள்ளையடித்துள்ளது. அந்த பணத்தை பல பயனுள்ள பகுதிகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இவ்வளவு பெரிய தொகையை பயன்படுத்தி இருக்கலாம். 24 ஐஎன்எஸ் விக்ராந்த், 300 ரஃபேல் ஜெட் விமானங்கள், 1000 மங்கல் மிஷன்களை தயாரித்திருக்கலாம் அல்லது வாங்கியிருக்கலாம்.
ஆனால், காங்கிரஸின் ஊழலின் காரணமாக நாடு பின்தங்கி சென்றது. 2004-2014 வரை நடந்த காங்கிரசின் பதவிக்காலம் "இழந்த தசாப்தம்". மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களும், அந்த நாட்களில், ஊழல் செய்திகளால் பத்திரிகை காகிதங்கள் நிரப்பப்பட்டன.
2ஜி ரூ.1.76 லட்சம் கோடி, எம்என்ஆர்இஜிஏ ஊழல் ரூ.10 லட்சம் கோடி, காமன்வெல்த் ஊழல் ரூ.70,000 கோடி, இத்தாலியுடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ரூ.362 கோடி லஞ்சம், ரெயில்வே வாரியத் தலைவருக்கு 12 கோடி லஞ்சம் என்று ஓழ்த்தால் குற்றசாட்டுகளை பாஜக அதில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸின் ஊழலின் டிரெய்லர் மட்டுமே, அவர்களில் முழுப்படம் இன்னும் முடிவடையவில்லை என்றும் காணொளி முடிவில் பாஜக தெரிவித்துள்ளது.
English Summary
BJP releases first episode of Congress Files corruption