கர்நாடகவில் பரபரப்பு! சித்தராமையா பதவி விலககோரி பாஜக நடைபயணம்!
BJP walks to demand Siddaramaiah resignation
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலககோரி பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா ஜனம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதலமைச்சராக சீதாராமையா உள்ளார். சமீபத்தில் வால்மிகீ வளர்ச்சி வாரியம், மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையம் முறைகேடுகள் நடந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டும் இல்லாமல் கர்நாடக முதலமைச்சர் சீத்தராமையாவின் மனைவி பார்வதி மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் சட்ட விரோதமாக 14 வீட்டு மனைகளை பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்து கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வால்மிகீ முறைகேடு தொடர்பாக அமைச்சராக இருந்த நாகேந்திர கவுடா பதவி விலங்கினார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முறைகேடு புகார் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முறைகேடு விவகாரத்தில் கவர்னர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மூடா ஊழல் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக கோரி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் என்றும் முதல் நடை பயணம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
BJP walks to demand Siddaramaiah resignation