20 அடி உயரத்தில் இருந்து கிரேனுடன் சரிந்து விழுந்த கவுன்சிலர் - உயிருக்கு ஆபத்தா? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மாவட்டம் மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க கிரேன் ஒன்று சென்ற போது எதிர்பாராதவிதமாக சரிந்து 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

அப்போது அந்த கிரேனில், போபாலின் 66-வார்டின் கவுன்சிலர் ஜிதேந்திர சிங் ராஜ்புத் தனது மாமாவுடன் இருந்தார். அவர்களில் ஒருவர் கிரேன் ஆபரேட்டரிடம் மேலே செல்லும்படி சைகை செய்வதைக் கண்டார்.

இதையடுத்து கிரேன் சிலையை அடைந்ததும், கவுன்சிலர் மாலை அணிவிக்க முன்னோக்கி சாய்ந்துள்ளார். திடீரென கிரேனில் இருந்த வெல்டிங் உடைந்ததால், கிரேன் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் ராஜ்புத்தின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதே நேரத்தில் அவரது மாமாவும் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bobal councilar fell down


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->