இந்தியாவின் மூன்றாவது தவணை தடுப்பூசி.! முடிவை எடுத்த குழு., வெளியாகிறது அறிவிப்பு.!
Booster Corona Vaccine in India
மூன்றாவது தவணை கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசின் தடுப்பூசி காண தேசிய தொழில்நுட்ப குழு இன்று முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தற்போது கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் அல்லது மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
பூஸ்டர் தடுப்பூசி என்பது முழுமையாக இரு தவணை தடுப்பூசி போட்டதற்கு பின், (ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர்) தடுப்பு திறன் குறைவதை சமாளிக்க போடக்கூடிய தடுப்பூசிக்கு பெயர்தான் பூஸ்டர் தடுப்பூசி அல்லது மூன்றாவது தவணை தடுப்பூசி ஆகும்.
ஆனால், இந்த கூடுதல் தடுப்பூசி என்பது போடப்பட்ட பின்பும் கொரோனாவுக்கு எதிரான நோய் தடுப்பு திறனை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு போடப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசி போடலாமா என்பது குறித்து மத்திய அரசின் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப குழு இன்று ஆலோசனை செய்து முடிவு எடுத்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தொடங்குவது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமா அல்லது கூடுதல் தடுப்பூசி போடலாமா என தேசிய தொழில்நுட்பக் குழு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது. இந்த குழுவின் ஆலோசனை முடிவை அடுத்து, மத்திய அரசு இதுகுறித்து முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Booster Corona Vaccine in India