பலரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் சிவப்பு டி-ஷர்ட் - நடந்தது என்ன?
boy stopped train in west bengal for whole in railway track
பலரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் சிவப்பு டி-ஷர்ட் - நடந்தது என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா அருகே கரியாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுவன் முர்சலீன். இவர் விடுமுறை நாளான இன்று வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காகச் சென்றார். அப்போது ரயில் பாதைக்கு அடியில் மழையினால் நிலம் சரிந்து பெரிய ஓட்டை இருந்ததை பார்த்துள்ளார்.
அந்த நேரம் பார்த்து அந்த ரயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே சிறுவன் முர்சலீன், தான் அணிந்திருந்த சிவப்பு நிற டி-ஷர்ட்டை கழற்றி ரயிலுக்கு முன்பு காட்டிய படியே ஓடி வந்தான்.
இதைக் கவனித்த ரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து விசாரித்ததில், சிறுவன் முர்சலீன் அவரிடம் தண்டவாளத்தில் பெரிய பள்ளம் இருப்பதைக் கூறினான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர், பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் முர்சலீனை வெகுவாக பாராட்டினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிடி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பள்ளத்தை மண் வைத்து நிரப்பிய பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. பலரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
boy stopped train in west bengal for whole in railway track