மேற்குவங்கத்தில் கொடூர ரயில் விபத்து! நசுங்கிப்போன ரயில் பெட்டிகள்! பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா பயணிகள் ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து நடந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தொய்வுடன் நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ரயில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சீர்குலைந்தன. 

விபத்துப் பகுதிக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில், இந்த ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ரயில் விபத்து குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மேற்கு வங்க மாநிலம் பனிஷ் தேவா பகுதியில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துகுள்ளானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள், பேரிடர் மீட்பு குழு, ஆம்புலன்ஸ் விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breaking News West Bengal Kanchenjunga Express Train Accident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->