தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் மண்டியிட்டு கதறி அழுத தலைவர் - வைரலாகும் வீடியோ.!
BRS leader thatikonda rajaiah down and cry vedio viral
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மண்டியிட்டு கதறி அழுத தலைவர் - வைரலாகும் வீடியோ.!
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இதில் ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கிடைக்காததால் கட்சித் தலைவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, தட்டிகோண்டா ராஜையா என்பவர் ஸ்டேசன் கான்புர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ உள்ளிட்ட நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைத் தோற்கடிக்க முயற்சி செய்து, இறுதியில் தோல்வியைத் தழுவியது.
English Summary
BRS leader thatikonda rajaiah down and cry vedio viral