பஞ்சாப் : பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாபின் சர்வதேச எல்லையை கடந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் உள்ள பாபாபிர் எல்லை அருகே வழக்கமான எல்லை பாதுகாப்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியா எல்லைக்குள் ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியது. இதை கண்டறிந்த எல்லை பாதுகாப்பு படையினர், துப்பாக்கி சூடு நடத்தி ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

இந்த ஆளில்லா விமானம் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக பிப்ரவரி 3ஆம் தேதி, அமிர்தசரஸ் அருகே கக்கர் கிராமத்தில், இந்திய எழைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, 5 கிலோ ஹெராயினை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSF shot down Pakistan drone in Punjab


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->