உடல்களை மீட்க அனுப்பப்பட்ட C-130J விமானம், வேதனையில் உள்ள குடும்பங்கள் !! - Seithipunal
Seithipunal


தெற்கு குவைத்தில் கடந்த 12ஆம் தேதி புதன் கிழமை வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்களின் உடல்களை மீட்க இந்திய ராணுவ போக்குவரத்து விமானத்தை இந்தியா குவைத்துக்கு அனுப்பியது.

இந்த கட்டிட தீ விபத்தில் பலியான 45 இந்தியர்கள் மற்றும் மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் உடல்களை அடையாளம் கண்டுள்ளதாக குவைத் அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர். மேலும் இந்த தீ விபத்தில் குறைந்தது 49 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் பலத்த தீ காயமடைந்தனர்.

இது சம்பந்தமாக டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய விமான படை அதிகாரிகள் ஆலோசனை செய்து, இந்திய விமானப்படையின் C-130J ரக போக்குவரத்து விமானம் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வரும் என்றும், இறந்த இந்தியர்களில் பெரும்பாலோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அது முதலில் கொச்சியில் தரையிறங்கும் என்றும் தெரிவித்தனர்.

இன்று குவைத் சென்றடைந்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், வளைகுடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அலி அல்-யாஹ்யா, அல்-சபா மற்றும் சுகாதார அமைச்சர் அஹ்மத் அப்தெல்வஹாப் அஹ்மத் அல்-அவாடி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், வெளியுறவு மந்திரி அல்-யாஹ்யா சம்பவம் குறித்த விசாரணை உட்பட இந்தியாவுக்கு முழு ஆதரவை தருவதாக உறுதியளித்து உள்ளார்

குவைத்தின் மங்காஃப் பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மற்றும் சோகமான தீ விபத்தில், சுமார் 40 இந்தியர்கள் இறந்ததாகவும், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

c130j plane has been sent to rescue bodies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->