குஜராத்தில் கொடூர விபத்து | தொங்கு பாலம் இடிந்து, 200 க்கும் மேற்பட்ட மக்கள் நீரில் விழுந்த சோகம்! - Seithipunal
Seithipunal


குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில், 400க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் இன்று மாலை இடிந்து விழுந்ததால், அதில் நின்றிருந்த பலர் ஆற்றில் விழுந்ததாக தெரிகிறது.

அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட இந்த பாலத்தில், இன்று மக்கள் அதிகம் நின்றதால்  பாரம் தாங்கமால் இடிந்து விழுந்துள்ளது.

பாலம் இடிந்ததால், பலர் ஆற்றில் விழுந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு பணி நடந்து வருகிறது. 

சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கருத்துப்படி, பாலம் உடைந்தபோது பல பெண்களும் குழந்தைகளும் இருந்ததாகவும், பலர் நீருக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசியுள்ளார். அப்போது மீட்புப் பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cable bridge collapsed in the Machchhu river in Gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->