வெள்ளிக்கிழமை தொழுகை இடைவேளை ரத்து!....மாநில அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


1937-ம் ஆண்டு  காலணித்துவ ஆட்சிக்காலத்தின்போது, அசாம் மாநிலத்தில், முஸ்லிம் லீக் அரசாங்கத்தின்கீழ் மாநில சட்டசபையில் வெள்ளிக்கிழமை நாட்களில் தொழுகைக்கு 2 மணி நேரம் இடைவேளை விடும் வழக்கம் கொண்டு வரப்பட்டது.  

கடந்த 87 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
அதன்படி அசாம் சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் பிஸ்வஜித் அறிவித்துள்ளார்.

மேலும், வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் இடைவேளை விடப்படுவதால், முக்கிய விவாதங்களை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து தொழுகைக்கான இடைவேளை நேரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மாநில அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தது தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது  அசாம் சட்டசபையில் உள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக இந்த முடிவை  ஒருமனதாக தீர்மானித்தோம் என்றும், அந்த இடைவேளை நேரத்தில் நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இது ஒருமித்த முடிவு என்றும், இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cancellation of Friday prayer break Strong opposition to the action of the state government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->