காவல் நிலையத்தில் இந்துத்துவா ஆதரவாளர் மீது பரபரப்பு புகார் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள, பெங்களூரு பைடராயனபுராவில் மால் ஆப் ஏசியா என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த மாலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில், அலங்காரம் செய்யப்பட்டது. 

அப்போது அங்கு வந்த பசு பாதுகாவலர் அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவா ஆதரவாளரான புனித் கெரேஹல்லி உள்ளிட்ட நான்கு பேர் சென்றனர். மாலில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரங்கள் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு உதவி மேலாளருடன் சண்டையிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், "புனித் கெரெஹல்லி மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர்," கிறிஸ்துமஸ் பண்டிகைக்க மட்டும் ஏன் அலங்காரம் செய்தீர்கள், இந்து பண்டிகைகளுக்கு ஏன் அலங்காரம் செய்வதில்லை?" என்று தகராறு செய்தனர். 

மேலும், "அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் 2024 ஜன.22-ம் தேதி மால் முழுவதும் அலங்காரம் செய்ய வேண்டும்" என்று மிரட்டி, மாலுக்கு உள்ளே வருபவர்களையும் தடுத்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against Hindutva supporter in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->