முஸ்லிம் வாக்காளர்களின் புர்காவை அகற்ற கோரிய சம்பவம் - பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கே. மாதவி லதா போட்டியிடுகிறார். இதேபோல், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் சார்பில் அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், வேட்பாளர் லதா வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அவர்களின் புர்காவை நீக்கி முகங்களை காட்டும்படி கூறியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், வாக்கு மையத்திற்கு வந்த பெண் வாக்காளர்களிடம் உங்களுடைய புர்காவை நீக்கி விட்டு, முகங்களை காட்டுங்கள். அதனாலேயே அடையாளங்களை ஆய்வு செய்ய முடியும் என்று அவர் கூறுகிறார்.

மேலும் அவர், வாக்காளர்களை முழு அளவில் ஆய்வு செய்த பின்னரே வாக்கு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடமும் கூறுகிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக, மலக்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஐதராபாத் ஆட்சியர் அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on bjp candidate in telangana


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->