மாணவிகளை ஹிஜாப் அணிய சொல்லி வலியுறுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு.!
case filed against ganga jamuna school for asking students wear hijap
மாணவிகளை ஹிஜாப் அணிய சொல்லி வலியுறுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு.!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் ஹிஜாப் அணியச் சொல்லி தங்களைக் கட்டாயப்படுத்தியதாகவும், கையில் காத்திருந்த கயிறு, நெற்றியில் வைத்திருந்த பொட்டு உள்ளிட்டவற்றை நீக்குமாறும் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இறைவணக்கக் கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பட வைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளியில் மாணவிகளை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் ஏற்கனவே கங்கா ஜமுனா பள்ளி சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
case filed against ganga jamuna school for asking students wear hijap