ராக்கிபாய் ராகுல் காந்தி மீது எம்ஆர்டி மியூசிக் அளித்த புகாரினால் வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்பொழுது தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவை தாண்டி தற்போது தெலுங்கானாவை சென்றடைந்துள்ளது. இந்த யாத்திரையில் பல்வேறு தரப்பட்ட மக்களும் ராகுலை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோடோ யாத்திரையின் போது கேஜிஎப்-2 பாடலை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் கேஜிஎப்-2 படத்தின் பாடல் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனத்தின் வழக்கறிஞர் நரசிம்மன் சம்பத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் "கேஜிஎப்-2 படத்தின் பாடலை முன்ன அனுமதியின்றி பயன்படுத்தியதுடன் அதில் ராகுலை முன்னிலைப்படுத்தி வீடியோ தயாரித்து பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஹிந்தி பாடலுக்காக ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. எங்களின் அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சி இந்த பாடலை பயன்படுத்தி உள்ளனர்" என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி, ஜெயராம் ரமேஷ், சுப்ரியா ஸ்ரீ நாதே ஆகியோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 403, 565, 120 ஆகிய சட்டப்பிரிவின் கீழும், 1957 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நகுல் நடிப்பில் வெளியான மாசிலாமணி படத்தின் பாடலை மையப்படுத்தியும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed against Rahul for using kgf2 song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->